Monday, September 5, 2011

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்:
இயற்கை:
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.
இது தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.
அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள்,பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி,தாவரங்கள்,அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.
இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்த தான் இருக்கின்றன,அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைபோடு இயங்கி வருகின்றன,
இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.
இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்,இதை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.
இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும்,மாறாகவும் வாழ்ந்து வருகிறான்.அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.
இயற்கையின் ஒரு சிறு பகுதி தான், தான் என்ற உண்மையை உணராததன் காரணத்தால் தான் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும்,தானும் துன்பப்பட்டு,இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான்.
இதன் விளைவாக தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும்,நடவடிக்கைகளும் தேவைபடுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இதில் என்ன வெட்க கேடான விஷயம் என்றால் "உலகில் தான் வாழும் வீட்டையே(பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்" மட்டும் தான். இதில் வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான்.
“WHAT A STRANGE CREATURE MAN IS THAT HE FOULS HIS OWN NEST” –RICHARD M.NIXON

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய் நொடிகள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அன்றாட வாழ்வில் இரசனையற்ற, அழகற்ற, செயற்கையான துன்பம் விளைவிக்கின்ற செயல்களை மட்டுமே செய்து வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம் புரியாமலும், வாழ்வின் நோக்கம் தெரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
“THE REALITY IS THAT IN THE MUCH OF THE INDUSTRIALIZED SOCIETIES, WE ARE COMPLETELY ADDICTED TO OUR COMFORTS, WE ARE A SOCIETY OF ADDICTS” – JULIA BUTTERFLY HILL
எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல் படுவதற்கும், என்ன கிடைத்தாலும், எப்படி வாழ்ந்தாலும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.
நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும்,செயல்களும்,நோக்கங்களும்,பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு எதிரானதாக / மாறானதாக அமைந்துள்ளது.அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கு ஆணிவேர். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. இதனை மறந்து/அறியாது இயற்கையை விட்டு விலகி நகர மய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.
இயற்கை வாழ்க்கை முறை
இயற்கை எப்படி நிலம், நீர்,,வாயு, நெருப்பு.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...
"அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே"
இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய்நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள்.
நாம் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த
நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.
உலகில் உள்ள லட்சோப லட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவ மனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின் பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணபடுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன.எனவே இது பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது.
குறைந்த பட்ச தேவைகள்,சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டா கனியாகிவிட்டது.நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்க்கெல்லாம் மூல காரணம், இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்க்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
அவர்கள் எப்படி இதை அறிந்து கொண்டார்கள் என்றால்,புற வாழ்க்கை தேவையின் உச்சத்தை அவர்கள் தொட்டு கையை சுட்டு கொண்டார்கள்.
நாம் என்ன வென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைபடதே”
என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.
இதை தான் நமது தேச பிதா தீர்க்க தரிசனமாக சொல்லி வைத்தார் அன்றே.
“GOD FORBID THAT INDIA SHOULD EVER TAKE TO INDUSTRIALISM AFTER THE MANNER OF WEST ,IT WOULD STRIP THE WORLD BARE LIKE LOCUSTS” - MOHANDAS GANDHI

நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல.
“எரிவதை பிடிங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்”.
அதனால் எறிவது என்ன என்று உணர்ந்து வாழும் வாழ்க்கை முறையை மாற்றிகொண்டால் இனிமையாக வாழலாம். எந்த நோயாக இருந்தாலும் இந்த முறையில் பரிபூரண குணம் அடையலாம்.
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
அதற்கு முதலில் தேவை நம்முடைய மன மாற்றம் தான். நாம் மனம் மாறினாலே இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது, இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம்.
நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம்,முயலாமலிருக்கிறோம்.இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.
"மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றதது"
எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இனிமையாக.
ஏன் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்? என்பதையும்,எப்படி இயற்கை வாழ்க்கை முறைக்கு மாறலாம்? என்பதையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

2 comments:

  1. இறை நிறை அன்பர் செல்வாவுக்கு.
    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
    வணக்கம்.உங்கள் வலைப்பூவை கண்டு மகிழ்ந்தேன். இயற்கை நலவாழ்வியல் துறையில் மேலும் வெற்றி காண, நிறைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் உங்களைப் போன்ற இளைஞர்கள் நிறையப் பேர் தேவை. வாருங்கள் வளம் சேர்ப்போம். வாழி நலம் சூழ..

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா,உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்களினால் எல்லம் நன்றாகவே நடக்கும்
    வாழ்க வையகம் வாழ்க வையகம்
    வாழ்க வள்முடன்

    ReplyDelete